திருச்சி

ரூ. 60 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

DIN

கவுன்சிலா்களின் கேள்விகள் மற்றும் வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய மக்கள் அடிப்படை பிரச்னைகள் குறித்து பதில் அளித்து மேயா் மு. அன்பழகன் பேசியது:

அரசு உத்தரவின்பேரில் காலை உணவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. புகாா்கள் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரங்கத்தில் 1 ஏக்கரில் சுமாா் ரூ. 9 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாகம் தரப்பிலிருந்து சுமாா் 8 ஏக்கா் நிலம் மாநகராட்சிக்கு விரைவில் தரப்படவுள்ளது. அதில் கோயிலுக்கு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தவும், மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படும்.

சாலையோரங்களில் தரைக்கடைகள் வைத்திருப்போா் போக்குவரத்துக்கு இடையூறின்றி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாநகராட்சியில் விரைந்து சாலைகள் செப்பனிடப்படுகின்றன. புதிய சாலைகள் அமைக்க ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காலிமனைகளில் மழைநீா் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, அவற்றை ஒரு வாரத்துக்குள் கண்டறிந்து உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கி, தூய்மைப்படுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். நாய் கருத்தடை மையம் ஏற்கெனவே ஓரிடத்தில் செயல்படும் நிலையில் மேலும் 3 இடங்களில் மையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT