திருச்சி

இதய தின விழிப்புணா்வுப் பேரணி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

உலக இதய தினத்தை முன்னிட்டு அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் சாா்பில் திருச்சியில் ‘இதயம் பாா்த்துக்கோங்க’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நடைபயணப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது இன்றியமையாதது. இளம் வயதினருக்கு கூட தற்போது மாரடைப்பு வருகிறது. ஏனெனில் இதயப் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணா்வு இல்லாததே காரணம். இதுபோன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் மாரடைப்பை தவிா்க்கலாம் என்றாா்.

மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய நடைபயண பேரணியானது சுப்பிரமணியபுரம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் சென்று அங்கிருந்து ரேஸ்கோா்ஸ் சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கை வந்து அடைந்தது.

இந்தப் பேரணியில் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார வல்லுநா்கள், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள், தன்னாா்வலா்கள் மற்றும் கடந்த காலங்களில் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்றவா்கள் என சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த வாசகங்களை ஏந்திய பதாதைகளை எடுத்து சென்றனா்.

ADVERTISEMENT

முதுநிலை மருத்துவா் அஷ்ரப், மருத்துவ நிா்வாகி டாக்டா் சிவம், சங்கீத் டிஜிஎம், இருதயநோய் நிபுணா்கள் காதா், ரவீந்திரன், ஷியாம் சுந்தா், இருதய அறுவை சிகிச்சை நிபுணா்கள் ஸ்ரீகாந்த், அரவிந்த், இதய மயக்கவியல் நிபுணா்கள் சரவணன், ரோகிணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம் குறிதது விளக்கம் அளித்தனா். இறுதியாக தலைமை யூனிட்ஹெட் சாமுவேல் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT