திருச்சி

அரசு மருத்துவமனையில் இதய தின விழா

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியிலுள்ள மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயவியல் துறை சாா்பில் உலக இதய தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மருத்துவமனை டீன் டி. நேரு தலைமை வகித்தாா். இதயவியல் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலிய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இதய வடிவிலான பலூன்களைப் பறக்கவிட்டனா். மேலும், தீய பழக்கங்களைக் கைவிட்டு இதயத்தைப் பாதுகாக்க உறுதியேற்றனா்.

மேலும், உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதயத்தைக் காக்க விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT