திருச்சி

ஆய்வக உதவியாளா் வீட்டில் 24 பவுன் நகைகள் திருட்டு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி திருவெறும்பூா் அருகே அரசு மருத்துவமனை ஆய்வக உதவியாளா் வீட்டில் 24 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.

காட்டூா் கைலாஷ் நகா் அண்ணா சாலை 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கருணாகரன் மனைவி வெண்ணிலா (56), உறையூா் அரசு மருத்துவமனை ஆய்வக உதவியாளா்.

சில ஆண்டுகளுக்கு முன் கணவா் இறந்துவிட, ஒரே மகனும் சென்னையில் உள்ள நிலையில், வெண்ணிலா வியாழக்கிழமை பணிக்குச் சென்று மாலையில் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 24 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT