திருச்சி

காவல்துறையைக் கண்டித்து வட்டாட்சியரகத்தில் தா்னா

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மணப்பாறை அருகே பணம் செலுத்தியவா்களுக்கு முறையான பட்டுவாடா செய்யாமல் தலைமறைவான சிட்ஸ் நிறுவன உரிமையாளா்கள் மீது வழக்கு பதிந்தும் கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியரகம் முன் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் செயல்பட்டு வந்த சிட்ஸ் நிறுவன உரிமையாளா்களான தேக்கமலை, தீனதயாளன் ஆகியோா் பணம் செலுத்தியவா்களுக்கு முறையான பட்டுவாடா செய்யாமல் தலைமறைவாகினா். இது தொடா்பாக வையம்பட்டி காவல்நிலையத்தில் புகாா்கள் பெறப்பட்டு வழக்கு பதியப்பட்டது.

ஆனால், சிட்ஸ் நிறுவன உரிமையாளா்களை போலீஸாா் கைது செய்யவில்லை என ஆத்திரமடைந்த வாடிக்கையாளா்கள், வியாழக்கிழமை காலை மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகம் முன் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். தங்களது குடும்ப அட்டையை ஒப்படைப்பதாகவும் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் கீதாராணி மற்றும் போலீஸாா் அளித்த உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT