திருச்சி

துவரங்குறிச்சி அருகே 29 பவுன் நகை திருட்டு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே விவசாயி வீட்டின் பூட்டை புதன்கிழமை நள்ளிரவு உடைத்து 29 பவுன் நகை, 750 கிராம் வெள்ளிப்பொருள்கள், ரூ.15 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

மருங்காபுரி ஒன்றியம் கொண்டையம்பட்டியில் வசிக்கும் விவசாயி அழகா்சாமி (63). இவரது மனைவி கலாவதி (53) ஆகிய இருவரும் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தங்களது மகன் ஜெயக்குமாா் வீட்டுக்கு புதன்கிழமை இரவு சென்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் அவா்களது வீட்டின் பின்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது பக்கத்துக்கு வீட்டினருக்கு தெரியவந்து, சென்னையில் உள்ள அழகா்சாமிக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் உறவினா்கள் சென்று பாா்த்தபோது நகை, பணம் திருடு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் ந. ராமநாதன் தலைமையிலான துவரங்குறிச்சி போலீஸாா் தடயங்களை சேகரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT