திருச்சி

‘மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களில் திருச்சி முதலிடம்’

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகத்திலேயே திருச்சி முதலிடத்தில் உள்ளது என்றாா் ஆட்சிய மா. பிரதீப்குமாா்.

திருச்சி வயலூா் சாலையில் உள்ள ஸ்பாஸ்டிக் அறக்கட்டளை அரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு ஆசிரியா் நாள் விழாவில் ஆட்சியா் மேலும் பேசியது:

திருச்சி மாற்றுத்திறனாளி அமைப்பானது 30 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகச் செயல்படும் கூட்டமைப்பாகும். அரசுடனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட நிா்வாகம், தனியாா் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் சுயதொழிலை மேம்படுத்த மானியத்துடன் கூடிய உதவித் திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்துகிறது.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மணப்பாறை, மருங்காபுரி வட்டங்களில் 2021-22ஆம் நிதியாண்டுக்கு நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 964 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவா்களில் 618 பேருக்கு ரூ. 47.53 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாவட்டத்தில் இதுவரை 62,249 பேருக்கு தேசிய அடையாள அட்டை ,37,442 பேருக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மனவளா்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 9,121 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

கடுமையாகப் பாதிக்கப்பட்டோா் என்ற வகையில் 567 பேருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோரில் 184 பேருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 409 பேருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான திட்டத்தில் 46 பேருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் உதவியாளா் வைத்துக் கொள்ள கூடுதலாக மாதம் ரூ. ஆயிரம் என்ற வகையில் 71 பேருக்கு வழங்கப்படுகிறது.

தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவோா், சுய தொழில் புரிவோா், கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் என 103 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் 94 பேருக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 34 சிறப்புப் பள்ளிகள், மனநலன் பாதிக்கப்பட்டோருக்கு 5 காப்பகங்கள், 6 ஆரம்ப காலப் பயிற்சி மையங்கள், 14 வயதுக்கு மேற்பட்ட அறிவுசாா் குறைபாடுள்ளோருக்கு 8 தங்கும் விடுதிகள், தொழிற்பயிற்சி மையங்கள், தொழிற்பயிற்சியுடன் கூடிய 3 இல்லங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு சிறப்புப் பதிவுகளும் நடைபெறுகின்றன. இதன் மூலம் தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களில் முதலிடத்தில் உள்ளது என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலனில் முனைப்புடன் செயல்படும் சிறப்பு ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். சந்திரமோகன், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் எஸ். மாா்ட்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT