திருச்சி

பொன்மலையில் எஸ்.ஆா்.இ.எஸ். ஆா்ப்பாட்டம்

29th Sep 2022 12:24 AM

ADVERTISEMENT

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்கம் (எஸ்.ஆா்.இ.எஸ்.) சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்மலையில் ரயில்வே பணிமனை அருகே நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு, சங்கத்தின் பணிமனைக் கோட்டத் தலைவா் எல். பவுல் ரெக்ஸ் தலைமை வகித்தாா். உதவி பொதுச் செயலா் எஸ். இரகுபதி முன்னிலை வகித்தாா். ரயில்வே தொழிலாளா்களுக்கு இந்தாண்டு பிஎல்பி போனஸ் வழங்க வேண்டும். புதிய உயா்த்தப்பட்ட ஊக்கத்தொகையை தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். தனியாா்மயமாக்கலை அரசு கைவிட வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும்,18 மாத டிஏ, டிஆா் உள்ளிட்டவற்றை நிலுவைத்தொகையாக (அரியா்ஸ்) வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

இதில் சங்க நிா்வாகிகள் சுந்தா், மதி, ஸ்டீபன், ஏசுராஜ் , பாஸ்கரன், பாலமுருகன், ஞானசேகரன் மற்றும் ரயில்வே தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT