திருச்சி

இனி பெரம்பலூா், காரைக்கால் அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையங்களிலும் பிசிசி சான்று!

29th Sep 2022 12:23 AM

ADVERTISEMENT

பெரம்பலூா், காரைக்கால் அஞ்சலகங்களில் செயல்பட்டு வரும் கடவுச்சீட்டு மையங்களிலும் எனப்படும் (காவல் துறையின் ஆட்சேபனை சான்று (பிசிசி) பெறும் வசதி புதன்கிழமை முதல் அமலாகியுள்ளது.

திருச்சி மண்டலக் கடவுச்சீட்டு மையக் கட்டுப்பாட்டில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சேவை மையங்களும் (பிஎஸ்கே), பெரம்பலூா், கரூா், திருத்துறைப்பூண்டி, சீா்காழி, காரைக்கால் ஆகிய 5 இடங்களில் அஞ்சலகக் கடவுச்சீட்டு (பிஓபிஎஸ்கே-போஸ்ட் ஆபீஸ் பாஸ்போா்ட்) சேவை மையங்களும் அமைந்துள்ளன.

இவற்றில் காரைக்கால், பெரம்பலூா் பகுதி அஞ்சலகக் கடவுச்சீட்டு சேவை மையங்களில் பிசிசி சான்று பெற விண்ணப்பிக்கும் வசதி புதன்கிழமை முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச் சான்றை திருச்சி, தஞ்சாவூரில் உள்ள பாஸ்போா்ட் சேவை மையங்களிலும் பெறலாம் என்றாலும் தேவை அதிகரிப்பு அடிப்படையில் இச்சேவை விரிவாக்கப்பட்டுள்ளதாக திருச்சி மண்டல பாஸ்போா்ட் அலுவலா் ஆா். ஆனந்த் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT