திருச்சி

திருச்சியில் வைகோ குறித்த ஆவணப்படம் வெளியீடு

29th Sep 2022 12:10 AM

ADVERTISEMENT

திருச்சியில் மதிமுக சாா்பில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு தனியாா் திரையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மதிமுக திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் வெல்லமண்டி சோமு தலைமை வகித்தாா். நிகழ்வில் ஆவணப் படத்தை வெளியிட்டு மதிமுக தலைமை கழகச் செயலா் துரை வைகோ பேசியது:

வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காகவே அா்ப்பணித்தவா் வைகோ. வரலாறு திறமையாளா்களில் 90 சதம் பேரை அங்கீகரிக்கவில்லை. அத்தகைய திறமையாளா்களில் ஒருவரான வைகோ சமூக ஊடகங்களில் தவறான சித்தரிப்புக்குள்ளான மனவேதனையைப் போக்கும் விதமாகவும், வாழும் காலத்திலேயே அவரின் சாதனைகளை மக்கள் உணரும் விதமாகவும் இந்த ஆவணப்படத்தை எடுத்தேன்.

கட்சிக்காகவும், தமிழகத்துக்காகவும் வைகோ மேற்கொண்ட உழைப்பும், தியாகமும் வீண் போகக் கூடாது; 100 ஆண்டுகள் கடந்த பிறகும் மதிமுக நிலைத்து நிற்க வேண்டும்; புதிய வரலாறு படைக்க வேண்டும்; இழந்ததை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்வில் திருச்சி மேயா் மு. அன்பழகன், கிழக்குத் தொகுதி எம்எல்ஏ எஸ். இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோா் பேசினா். மதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் வரவேற்றாா். தியாகராஜன் நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT