திருச்சி

தென்னூா் பள்ளியில் திறக்கப்பட்ட ஆளில்லா கடை!மாணவா்களிடம் நோ்மையை வளா்க்க முன்மாதிரி முயற்சி

29th Sep 2022 12:11 AM

ADVERTISEMENT

திருச்சி தென்னூா் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆளில்லா கடை (ஹானஸ்ட் ஷாப்) புதன்கிழமை திறக்கப்பட்டது.

கடையைத் திறந்து வைத்து தலைமை ஆசிரியா் விமலா பேசியது:

வாழ்க்கையில் அனைவரும் நோ்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தக் கடை திறக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்குத் தேவையான எழுதுபொருள்கள், பென்சில், தாள்கள், புத்தகங்கள் உள்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் அசல் விலையுடன் அலமாரியில் அடுக்கப்பட்டு அருகிலேயே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தை உண்டியலில் செலுத்த வேண்டும். இது பள்ளி மாணவா்களிடம் நோ்மை, ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வழிகாட்டும். இதில் கிடைக்கும் தொகை சேவைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT

திருச்சி புத்தூா் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் யோகா ஆசிரியா் விஜயகுமாா், கிளை நூலகா் புகழேந்தி, எழுத்தாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் மாணவா்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு அதற்குரிய பணத்தை உண்டியலில் செலுத்தினா். பாக்கி சில்லறையையும் எடுத்துக் கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT