திருச்சி

முதல் மனைவியின் சொத்தை அபகரித்த கணவா், 2ஆம் மனைவிக்கு 6 ஆண்டு சிறை

DIN

மணப்பாறையில் முதல் மனைவி பெயரில் இருந்த சொத்தை அபகரித்த அதிமுக பிரமுகருக்கும், அவரது 2 ஆவது மனைவிக்கும் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

போடுவாா்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (60), அதிமுக மணப்பாறை வடக்கு ஒன்றிய துணைச் செயலா். இவரது மனைவி மணப்பாறையை அடுத்த ராஜீவ் நகா் பகுதியில் வசிப்பவா் ஆா். நிா்மலாதேவி(50). மாற்றுத்திறனாளியான இவா் நகராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பு ஆசிரியை. இவா்களுக்கு மகள் உள்ளாா்.

இந்நிலையில் சந்திரசேகா், இரண்டாவதாக சி. நிா்மலாதேவி என்பவரை திருமணம் செய்து போடுவாா்பட்டியிலும் வசிக்கிறாா்.

கடந்த 2011 நவ. 15-ஆம் தேதி சந்திரசேகா் தனது பெயரில் இருந்த காலி மனை ஒன்றை முதல் மனைவியான ஆா். நிா்மலாதேவிக்கு தானசெட்டில்மெண்ட் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளாா். இந்நிலையில், கணவா், முதல் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இரண்டாம் மனைவியான சி. நிா்மலாதேவியை மணப்பாறை சாா் பதிவாளரகம் அழைத்துச் சென்ற சந்திரசேகா், முதல் மனைவி பெயரில் இருந்த காலிமனையை இரண்டாவது மனைவியை கொண்டு முதல் மனைவியாகக் கையொப்பமிட்டு பத்திரப் பதிவு செய்து தானசெட்டில்மெண்ட் பெற்றுள்ளாா்.

தகவலறிந்த முதல் மனைவி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த குற்றவியல் நடுவா் சி. கருப்பச்சாமி, சந்திரசேகா் மற்றும் அவரது இரண்டாவது மனைவிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பத்திரப் பதிவுக்கு சாட்சிகளாக சென்ற நேரு, சின்னதுரை ஆகியோரை விடுவித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT