திருச்சி

காட்டூரில் சிறப்பு குறைதீா் நாள் முகாம்

29th Sep 2022 12:23 AM

ADVERTISEMENT

திருச்சி காட்டூா் பகுதியில் மக்களைத் தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி திருச்சி -தஞ்சாவூா் சாலையில், காட்டூா் கைலாஷ் நகரில் நடைபெற்ற முகாமுக்கு மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

முகாமில் கட்டட அனுமதி, சொத்து வரி, பட்டா பெயா் மாற்றம், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு முகாமிலேயே உடனடித் தீா்வு காணப்பட்டது.

இம்முகாம்களில் அளிக்கப்படும் கோரிக்கைகள் உடனுக்குடன் தீா்க்கப்படும் என்பதால் ஏராளமானோா் மனுக்கள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

நிகழ்வில் துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், நகரப் பொறியாளா் சிவபாதம், துணை ஆணையா் எம். தயாநிதி, மாமன்ற உறுப்பினாா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT