திருச்சி

திருச்சியில் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஆட்டோ தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்டோ தொழிலைப் பாதுகாக்க ஆட்டோவுக்கான இணைய வழி சேவையை நலவாரியத்தின் மூலம் தொடக்கி, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க, மானிய விலையில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு வழங்க வேண்டும்.

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஆட்டோ ஒட்டுநா்களுக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை சாா்பில் ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு,

ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாா்லஸ் தலைமை வகித்தாா்.

ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலா் சிவாஜி, சிஐடியு மாநகா் மாவட்ட செயலா் ரெங்கராஜன், மாவட்டத் தலைவா் சீனிவாசன், ஆட்டோ சங்க மாவட்டப் பொதுச் செயலா் மணிகண்டன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்கப் பொருளாளா் பழனியப்பன், அமைப்புச் செயலா் வெற்றிவேல், ஜங்சன் பகுதித் தலைவா் அழகுமலை, செயலா் வேல்முருகன், பொருளாளா் சிலம்புசெல்வன் உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT