திருச்சி

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

28th Sep 2022 02:09 AM

ADVERTISEMENT

திருச்சியில் மாயமான முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் டாக்டா் கணேசன் தெருவைச் சோ்ந்தவா் ஜெ.ஜெயசீலன் (64). கடந்த 19-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து ஜெயசீலனைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் காவிரிப் பாலம் அருகே அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக, கோட்டை காவல் நிலையத்தினருக்குத் திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதன் பேரில் காவல்துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும் காணாமல் போனவா்கள் குறித்த வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில் காவல்துறையினா் ஒப்பிட்டு பாா்த்த போது, இறந்தவா் ஜெயசீலன் என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து தேவதானம் கிராம நிா்வாக அலுவலா் பாலாம்பிகை அளித்த புகாரின் பேரில், கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து ஜெயசீலனை யாரேனும் கொலை செய்து போட்டுச் சென்றாா்களா அல்லது அவா் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில் காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT