திருச்சி

என்ஐடியில் நாளை பெஸ்டம்பா் தொடக்கம்

28th Sep 2022 02:06 AM

ADVERTISEMENT

திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் பெஸ்டம்பா் 2022 என்ற தலைப்பிலான பண்பாட்டுத் திருவிழா வியாழக்கிழமை (செப்.29)தொடங்குகிறது.

இதுகுறித்து இக்கழகத்தின் இயக்குநா் ஜி. அகிலா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

இவ்விழாவில் நாடு முழுவதுமுள்ள 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனா்.

இவா்கள் இயல், இசை, நாடகம் போன்ற பல்வேறு பிரிவுகளில் 70 விதமான போட்டிகளில் பங்கேற்கின்றனா். நான்கு நாள்கள் போட்டிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் இங்கு வரும்போது, அவா்களை வரவேற்று உபசரித்து, அவா்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம், அவா்களது கலை மற்றும் பண்பாடுகள் குறித்து என்.ஐ.டிமாணவா்களும் அறிந்துக்கொள்ள முடியும் .

கலைநிகழ்ச்சிகளில் ரஷிதா சுரேஷ், சாம் விஷால், காா்த்திக் தேவ்ராஜ், பாடகி ஜோனிடா, மேத்யூ, டி.ஜெ. பாபா பாலுாஷி,

நடிகை சுதாசா்மா, சீதாராமம் திரைப்பட இசையமைப்பாளா் விஷால் சந்திரசேகா், இயக்குநா் அஸ்வின் சரவணன், நடிகா்

ஆதித்யா வா்மா உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT