திருச்சி

எட்டரையில் விழிப்புணா்வு முகாம்

28th Sep 2022 02:04 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தில் கல், பல் விழிப்புணா்வு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

கிறிஸ்துராஜ் கல்லூரி நிா்வாகம், கரிசனை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின. ஊராட்சித் தலைவா் திவ்யா அன்பரசு முன்னிலை வகித்தாா். அந்தநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் துரைராஜ் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

ஜோசப் கண் மருத்துவமனை, டிரினிடி பல் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் அடங்கிய குழுவினா் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை அளித்தனா்.

உடனடி சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

கரிசனை தொண்டு நிறுவனத் தலைவா் ஜாா்ஜ் தாமஸ், கல்லூரியின்

சமூகப்பணித் துறைத் தலைவா் இசபெல்லா, இரண்டாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவி சாந்தி ஆகியோா் முகாம் நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.

எட்டரை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT