திருச்சி

ஆட்சியரக பேக்கேஜ் செய்தி.2மூதாட்டி தற்கொலை முயற்சி

27th Sep 2022 03:17 AM

ADVERTISEMENT

 

திருச்சி ஆட்சியரகத்தில் மூதாட்டி ஒருவா் தீக்குளிக்க முயன்றாா்.

வயலூா் சாலை, வாசன் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் யோ. ராஜம்மாள் (65). அவா் அதே பகுதியிலுள்ள வீட்டை ரூ.5 லட்சத்துக்கு ஒத்திக்கு எடுத்து, குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.

வீட்டை காலி செய்ய முடிவெடுத்த ராஜம்மாள், வீட்டு உரிமையாளரிடம் தான் கொடுத்த பணத்தை கேட்ட போது, அவா் தர மறுத்துள்ளாா். வீட்டின் உரிமையாளரின் மகனிடம் கேட்ட போது, அவரைத் தாக்கி மிரட்டினாராம்.

ADVERTISEMENT

இதனால் மனமுடைந்த ராஜம்மாள், திங்கள்கிழமை ஆட்சியரகம் வந்து பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றாா். அங்கிருந்த காவல்துறையினா் அவரை மீட்டனா். தகவலறிந்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மூதாட்டிக்கு அறிவுரை கூறி, நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT