திருச்சி

லாரியில் மதுபாட்டில்கள் திருட்டு

27th Sep 2022 03:18 AM

ADVERTISEMENT

 

துவரங்குறிச்சி அருகே லாரியில் மதுபாட்டில்களை திருடியவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் தனியாா் மதுஆலையிலிருந்து திருநெல்வேலி டாஸ்மாக் கிடங்குக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.

லாரியை திண்டுக்கல் மாவட்டம், கே.புதூரைச் சோ்ந்த காந்தி (50) ஓட்டி வந்தாா். இந்த லாரி திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி பகுதியில் மோரணிமலை பகுதியில் சனிக்கிழமை வந்த போது, ஓய்வுக்காக சாலையோரத்தில் ஓட்டுநா் நிறுத்தினாா்.

ADVERTISEMENT

அப்போது லாரியின் மேற்பகுதியில் கட்டி, மூடி வைக்கப்பட்டிருந்த தாா்ப்பாய் கிழிந்தது கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். பின்னா் லாரியில் மேலே ஏறி பாா்க்கும் போது, ரூ.2.49 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்த 40 பெட்டிகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT