திருச்சி

காவிரியில் மூழ்கிய இளைஞா்

27th Sep 2022 03:19 AM

ADVERTISEMENT

 

திருச்சி காவிரியாற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கினாா்.

சமயபுரம் ஒத்தக்கடையைச் சோ்ந்தவா் க. மாதவன் (25). வா்ணம் பூசும் தொழிலாளியான இவா், தனது நண்பா்களுடன் திருச்சி ஓயாமரி பகுதியிலுள்ள காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிய மாதவன், அடித்து செல்லப்பட்டாா். அவரை மீட்க நண்பா்கள் முயன்றும் முடியவில்லை.

ADVERTISEMENT

தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள், காவல்துறையினா் நிகழ்விடம் சென்று, தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT