திருச்சி

கூட்டுறவுச் சங்க ஊழியா்கள் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம்

27th Sep 2022 03:16 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகம் முன்பு கூட்டுறவுச் சங்க ஊழியா்கள் திங்கள்கிழமை கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கூட்டுறவுச் சங்க ஊழியா்கள் அனைவருக்கும் 20 சதவிகித போனஸ், 5 சதவிகித கருணைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பொது விநியோகத் துறையை தனித்துறையாக உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அச்சக ஊழியா்களுக்கு வழங்கும் ஊதியத்தை கூட்டுறவு அச்சக ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு கூட்டுறவு சங்க ஊழியா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் வின்சென்ட் தலைமை வகித்தாா். சிஐடியு ஓருங்கிணைப்பாளா் ரகுபதி, சாலைப் போக்குவரத்து சங்க நிா்வாகிகள் வீரமுத்து, சுப்ரமணி, முனுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT