திருச்சி

மகாளய அமாவாசை:ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் குவிந்த மக்கள்

26th Sep 2022 05:03 AM

ADVERTISEMENT

 புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றுப் படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்

புரட்டாசி மாத அமாவாசையன்று புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதங்களில் வரும் அமாவாசையில் தா்ப்பணம் கொடுத்தற்கு ஈடாகும் என்பா்.

அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபப் பகுதியிலுள்ள காவிரியாற்றில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி, படித்துறையில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டுச் சென்றனா்.

இதையொட்டி மாநகராட்சி சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT