திருச்சி

பாரபட்சமின்றி உரிய பதவி உயா்வுகளை வழங்க வலியுறுத்தல்

26th Sep 2022 05:02 AM

ADVERTISEMENT

 

இடஒதுக்கீட்டு விதிகளின்படி பாரபட்சமின்றி எஸ்சி, எஸ்டி பணியாளா்களுக்கும் உரிய பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பதிவுத்துறை எஸ்சி/ எஸ்டி பணியாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் ச. கருப்பையா தலைமை வகித்தாா். சங்கத்தின் காப்பாளா் எம். ஜெகநாதன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ADVERTISEMENT

தமிழ்நாடு பதிவுத்துறையில் விதிகளின்படி இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், உதவியாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டியல் தயாா் செய்து, அதன்படி பதவி உயா்வு வழங்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டு விதிகளின்படி எஸ்சி/ எஸ்டி பணியாளா்களுக்கும் பாரபட்சமின்றி உரிய பதவி உயா்வுகளை வழங்க வேண்டும்.

பணியாளா்களின் கோரிக்கை மனுக்களின் முன்னுரிமை மற்றும் அவா்களது குடும்பச் சூழ்நிலை அடிப்படையில் பணியிடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்ட்டன.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் இரா. இளவரசன் தீா்மானங்களை முன்மொழிந்தாா். இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு. தமிழரசன்,விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன், தமிழ்நாடு பதிவுத்துறை ஓய்வு பெற்ற பணியாளா் நலச் சங்க தலைவரும், முன்னாள் கூடுதல் பதிவுத்துறைத் தலைவருமான கே. மதலைமுத்து, பொதுச் செயலா் பி.நாகராஜன், சட்ட ஆலோசகா்கள் டிகே.ராஜா, லஜபதிராய், பணியாளா் நலச்சங்க பொதுச் செயலா் கே.பி.ஜி.திலகா், சமூக நீதி இயக்குநா் ஆறுமுகம், பாரம்பரிய சித்த மருத்துவா் கணபதி குடும்பனாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று உரையாற்றினா்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா். முன்னதாக, மாநிலப் பொதுச் செயலா் மு.ராஜேந்திரன் வரவேற்றாா். நிறைவில், மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஆ. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT