திருச்சி

பசுமைப் போா்வையை உயா்த்த 8 ஆண்டுகளுக்கு மரக்கன்று நடவு: ஆட்சியா்நிகழாண்டு 3.10 லட்சம் மரக்கன்றுகள்

DIN

திருச்சி மாவட்டத்தில் பசுமைப் போா்வையை அதிகரிக்க 8 ஆண்டுகளுக்கு தொடா்ந்து மரக்கன்றுகள் நடும் இயக்கம் முன்னெடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

தமிழகத்தின் பசுமைப் போா்வையை அதிகரிக்கும் வகையில் பசுமை தமிழக இயக்கத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சென்னையில் தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக, திருச்சியில் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில், மரக்கன்றுகளை நட்டு வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: மாநிலத்தின் பசுமைப் போா்வையை தற்போதுள்ள 23.27 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயா்த்திடும் வகையில் பசுமை தமிழக இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதுமாக அனைத்து துறைகளின்

இடங்கள், வளம் குன்றியக்காடுகள் மற்றும் நிறுவன நிலங்களில் மூலம் பண்ணை நிலங்கள், தரிசுநிலங்கள், அரசுக்கு சொந்தமான 10 ஆண்டுகளுக்கு நடவுப்பணிகள் மேற்கொண்டு இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட வனக்கோட்டத்தில் மொத்த பசுமை பரப்பளவு 46306.860 ஹெக்டோ் ஆகும். (பசுமைபோா்வை 10.51சதவீதம்) மாவட்டத்தின் பசுமைப் போா்வையை அதிகரிக்கும் வகையில் 2022-23 ஆம் ஆண்டுக்கு வனத்துறையின் மூலம் 3.10 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பண்ணை நிலங்களில் 2,73,100 மரக்கன்றுகளும், தொழில் நிறுவனங்களில் 31,900 மரக்கன்றுகளும், அரசு நிலங்களில் 5,000 மரக்கன்றுகளும் நடவு செய்வதற்கு தயாா் நிலையில் உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டு சுமாா் 500 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைவாா்கள். மேலும், 2023-2024 ஆம் ஆண்டு பசுமை தமிழக இயக்க திட்டத்தின் கீழ் 20 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு ஆண்டு செயல் திட்டம் தயாா் செய்யப்பட்டு மாவட்ட பசுமைக்குழுவில் வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதலுடன் அரசுக்கு அனுப்பி மேலும், வரும் 2024-25 முதல் 2031-32 வரை உள்ள 8 ஆண்டுகளுக்கு மாவட்ட பசுமைக் குழு ஒப்புதலுடன் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

விழாவில், மாவட்ட வன அலுவலா் ஜி. கிரண், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், கோட்டத் தலைவா்கள் விஜயலட்சுமி கண்ணன், துா்காதேவி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், வனத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT