திருச்சி

தேசிய கால்நடை இயக்கத்தில் தொழில் முனைவோா் மானியம்

DIN

தேசிய கால்நடை இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் மானியத் தொகையை தகுதியானோா் பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய, தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம்

செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு முதலீட்டில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இத் திட்டத்தில் சோ்ந்து தொழில் முனைவோராக விரும்புவோா் தனிநபா், சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியோரை தொழில் முனைவோராக உருவாக்க மானியம் வழங்கப்படும். கிராமப்புற கோழிகள் இன மேம்பாட்டுக்காக தொழில் முனைவோரை நிறுவ 50 சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் மானியம், வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மானியம், பன்றி வளா்ப்பில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க அதிகபட்சம் ரூ. 30 லட்சம் மானியம் வழங்கப்படும்.

தீவன உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சேமிப்பு அலகு நிறுவுதலுக்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சோ்ந்து பயனடைய விருப்பமுள்ள பயனாளிகள் பொதுத்துறை வங்கிகள் மூலமாகவோ, மற்றும் சுயநிதி நிறுவனத்திடமிருந்து கடன்பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம். இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளோா் உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமித்ரா இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT