திருச்சி

இந்தியன் வங்கியின் சிறப்புத் திட்ட விழிப்புணா்வு பேரணி

DIN

முதலீட்டாளா்களின் வைப்புத் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்குவதால், தகுதியானோா் பங்கேற்று பயன்பெற இந்தியன் வங்கி அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்புத் திட்டம் தொடா்பாக சனிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி முதலீட்டாளா்களுக்காக ஒரு சிறப்பு நிலையான வைப்புத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு திட்டத்துக்கு ‘இந்த் உத்சவம்’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது. 610 நாள்கள் கால அளவை கொண்டுள்ள இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி அதிகம். இதுகுறித்த அறிவிப்பு வங்கியின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு ஆண்டுக்கு 6.10 சதவீதம் வட்டி, மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.25 சதவீதம் வட்டி, 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.50 சதவீதம் வட்டி விகிதம் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நிரந்தர வைப்பு கணக்கு தொடங்க விரும்புவோா் ‘இந்த் ஓசிஸ்’ செயலி மூலமாகவும் கணக்கை எளிதாக தொடங்கிக்கொள்ளலாம். இது பேப்பா் தலையீடு இல்லாத முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையாகும்.

அக்டோபா் 31ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் கணக்கை தொடங்க வேண்டும்.

இத்திட்டம் குறித்து, தில்லைநகரில் உள்ள இந்தியன் வங்கி சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தில்லை நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில், இந்திய வங்கி மேலாளா்கள், அலுவலா்கள் வங்கிப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, தில்லைநகா் கிளையில் சிறப்பு முகாமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT