திருச்சி

பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் ரூ. 6.25 கோடி கடன் வழங்கும் விழா

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

லால்குடி சந்தைப்பேட்டை பகுதி தனியாா் கூட்டரங்கில் பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் விவசாயிகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 6 கோடியே 25 லட்சம் கடன் வழங்கும் விழா அண்ணையில் நடைபெற்றது.

பாங்க் ஆப் பரோடா வங்கி திருச்சி மண்டலம் சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு வங்கியின் திருச்சி துணை பிராந்திய மேலாளா் டி. ரவீந்திரா தலைமை வகித்தாா். விழாவில் திருச்சி, லால்குடி, மண்ணச்சநல்லூா், குழுமணி, மேட்டுப்பாளையம், ஏா்போா்ட், ஜம்புநாதபுரம் ஆகிய பகுதி விவசாயிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் 82 பேருக்கு ரூ. 6 கோடியே 25 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

விழாவில் பாங்க் ஆப் பரோடா வங்கி திருச்சி சாலை ரோடு கிளையின் முதன்மை மேலாளா் காமராஜ், லால்குடி முதுநிலை மேலாளா் சுரேஷ், வேளாண்மை துறை உதவி இயக்குநா் சுகுமாா், கோத்தாரி சா்க்கரை ஆலையின் நிதித்துறைத் தலைவா் பெலிக்ஸ், திருச்சி மகளிா் திட்டத் துணை அலுவலா் நிா்மலா மற்றும் விவசாயிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா் திரளாக பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT