திருச்சி

அரசுப்பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்வு

22nd Sep 2022 02:00 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட குழந்தை நலக் குழு, லயன்ஸ் சங்கம், காவல் துறை மற்றும் வசந்தம் பெண்கள் சங்கம் இணைந்து பள்ளித் தலைமையாசிரியா் சி. தண்டபாணி தலைமையில் நடைபெற்ற விழாவில் குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து மாணவா்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சிவராஜ், உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா்கள் அருண்குமாா், இளங்கோவன், லயன் கிளப் தலைவா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT