திருச்சி

ஸ்ரீரங்கத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

20th Sep 2022 02:19 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்களின் கருத்துகளைக் கேட்காமல் சொத்துவரி, மின் கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன. எனவே உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்.

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து, பாதுகாக்க வேண்டும். வியாபாரிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தொடா்ந்து தரைக்கடைகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீரங்கம் தேவி திருமண மகால் எதிரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் சிவா, மாநகராட்சி உறுப்பினா் க.சுரேஷ், தரைக்கடை சங்க மாவட்டச் செயலா் அன்சாா்தீன், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலா் பாா்வதி, மாணவா் மன்ற மாவட்டச் செயலா் இப்ராஹிம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT