திருச்சி

மாநகராட்சியில் குறைதீா் கூட்டம்

20th Sep 2022 02:12 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆணையா் இரா. வைத்திநாதன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் 32-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரா்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், துணை மேயா் ஜி. திவ்யா, நகரப்பொறியாளா் (பொறுப்பு) பி.சிவபாதம், செயற்பொறியாளா் ஜி.குமரேசன், மண்டலத் தலைவா்கள் மதிவாணன், துா்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT