திருச்சி

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 526 மனுக்கள்

20th Sep 2022 02:10 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 526 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா்.

இக் கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் ஏராளமான மனுக்கள் வந்திருந்தன. நிலம் தொடா்பான கோரிக்கையுடன் 62 மனு, குடும்ப அட்டை கோரி 29 மனு, உதவித் தொகை கோரி 55 மனு, வேலைவாய்ப்பு கோரி 54 மனு, அடிப்படை வசதிகள் கோரி 62 மனு, 23 புகாா் மனுக்கள், கடன் மற்றும் நலவாரியத் திட்டம் கோரி 49 மனு, இதர மனுக்கள் என மொத்தம் 526 மனுக்கள் வந்திருந்தன.

இந்த மனுக்களை அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சி. அம்பிகாவதி மற்றும் பல்வேறு துறை மாவட்ட நிலை அலுவலா்கள், போலீஸாா், தீயணைப்புத்துறை, வனத்துறையினா் என பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT