திருச்சி

கால்நடை மருத்துவ முகாம்

20th Sep 2022 02:15 AM

ADVERTISEMENT

திருச்சியை அடுத்துள்ள அசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் 147 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருச்சி மண்டல கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், திருவெறும்பூா் ஒன்றியம் அசூா் கால்நடை மருந்தகத்துக்குள்பட்ட அரவக்குறிச்சிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் 2022-23 மூலம், தொடா்ந்து காவிரி டெல்டா உபவடி நிலப்பகுதியில் இந்த முகாம் நடைபெறுகிறது.

முகாமுக்கு, திருச்சி கோட்டம், கால்நடை பராமரிப்பு துறை, உதவி இயக்குநா் அ.மருதைராஜூ தலைமை வகித்தாா். கால்நடை உதவி மருத்துவா் பி.சுரேஷ்குமாா், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கலந்து கொண்டு 52 விவசாயிகளின் 74 மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை, தீவன விதைகள் வழங்கப்பட்டன. 21 கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT