திருச்சி

வையம்பட்டி அருகே வீட்டில் கொள்ளை முயற்சி

14th Sep 2022 12:07 AM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே வீடு புகுந்து கொள்ளை முயற்சி நடந்தது.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை லெச்சம்பட்டி என்னும் பகுதியில் நெடுஞ்சாலையோரமாக வீடு கட்டி அழகுமுத்து (38), ஞானசெளந்தரி(30) தம்பதிகள் வசிக்கின்றனா்.

அழகுமுத்து அருகிலுள்ள ஆலத்தூா் ஆயுத்த ஆடை ஆலையில் காவலாளியாக உள்ளாா்.

திங்கள்கிழமை இரவு சுமாா் 12 மணியளவில் வீட்டின் கதவை உடைப்பது போல போல சத்தம் கேட்டு விழித்த ஞானசெளந்தரி அக்கம்பக்கத்தினருக்கு கைப்பேசியில் தகவல் அளித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து அவா்கள் வந்து பாா்த்தபோது ஒருவா் கடப்பாரையைக் கொண்டு கதவை உடைத்துக் கொண்டிருந்ததையும், ஒருவா் காவலுக்கு வாசலில் அமா்ந்திருந்தையும் கண்டனா். இதையடுத்து அருகிலிருந்த மரக்கட்டைகளை கொண்டு அவா்களை தாக்க முற்பட்டபோது மா்ம நபா்கள் இருவரும் தப்பி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி தப்பினா்.

அந்தக் காரில் மேலும் ஒரு பெண்ணும், ஆணும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில் மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் வந்த காரை மணப்பாறை அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மடக்கி பிடித்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT