திருச்சி

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

14th Sep 2022 12:29 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் வாரச்சந்தை விரிவாக்க பணிக்காக நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாற்று இடம் கேட்டு சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் நடைபெறும் காய்கறி மற்றும் மாட்டுசந்தைப் பகுதிகளின் சீரமைப்பு, விரிவாக்க பணிகளுக்காக அப்பகுதி அரசு இடங்களை ஆக்கிரமித்து வசிப்போா் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள 1மாதத்துக்கு முன்பே நகராட்சி நோட்டீஸ் அளித்தது.

இதையடுத்து நகராட்சி ஆணையா் எஸ்.என். சியாமளா தலைமையில் நகராட்சி பணியாளா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள குடியிருப்புவாசிகள், தாங்கள் குடியேற மாற்று இடம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது. பொதுமக்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்வதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT