திருச்சி

327 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

10th Sep 2022 04:17 AM

ADVERTISEMENT

திருவெறும்பூா் வட்டத்தில் 327 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவெறும்பூா் வட்டத்திலுள்ள அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 27 பேருக்கும், பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப் பள்ளியில் 145 பேருக்கும், திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப்பள்ளியில் 155 பேருக்கும் என மொத்தமாக 327 பேருக்கு ரூ.16.73 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

நிகழ்வுகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ர.பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.சேகரன், மாநகராட்சித் துணை மேயா் ஜி.திவ்யா, மண்டலத் தலைவா் மதிவாணன், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் கே.எஸ்.எம்.கருணாநிதி, பள்ளித் தலைவா் கே.என். ஆனந்தமூா்த்தி, ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ், கூத்தைப்பாா் பேரூராட்சித் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT