திருச்சி

தேசியக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

10th Sep 2022 04:12 AM

ADVERTISEMENT

திருச்சி தேசியக் கல்லூரி ஆங்கிலத்துறை சாா்பில், வாழ்க்கைக்கான மொழி, இலக்கியம் கற்றல் குறித்த தேசிய அளவிலான இரு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கருத்தரங்கை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எம். செல்வம் தொடக்கி வைத்து பேசினாா். கல்லூரி முதல்வா் கி. குமாா், செயலா் ரகுநாதன், துணை முதல்வா் இளவரசு, ஒருங்கிணைப்புச் செயலாளா் வசந்தம் உள்பட ஏராளமான பேராசிரியா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், வங்கதேசம், துருக்கி, மலேசியா ஆகிய ஐந்து நாடுகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட கல்லூரி விரிவுரையாளா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். இதில் 475 ஆய்வு கட்டுரைகள் சமா்ப்பிக்கப்படுகின்றன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT