திருச்சி

திருச்சியில் சிறைக் காவலா்கள் பயிற்சி நிறைவு விழா

10th Sep 2022 04:13 AM

ADVERTISEMENT

திருச்சி மத்திய சிறையில் வளாகத்தில் சிறைக் காவலா்களின் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையம் மூலம் சிறைக் காவல் பணிக்குத் தோ்வு பெற்ற 18 பெண்கள், 114 ஆண் காவலா்களுக்கு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் தமிழக சிறைகள், சீா்திருத்தப் பணிகள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

சிறைத்துறை டிஜிபி சுனில்குமாா் சிங், மாநகரக் காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் சந்தோஷ்குமாா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முதலணித் தளவாய் ஆனந்தன், மத்திய சிறைக் கண்காணிப்பாளா் ஆண்டாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருச்சி சரக சிறைத்துறை துணைத் தலைவா் ஜெயபாரதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து அமைச்சா் ரகுபதி செய்தியாளா்களிடம் கூறியது:

அரசுத் தரப்பில் தண்டனை முடிந்த கைதிகளில், 600 போ் வரை விடுதலை செய்ய கோப்புகள் தயாா் செய்யப்பட்டன. உயா் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, தனித்தனியாக கோப்புகள் அனுப்பப்பட்டு முதல்கட்டமாக 100 போ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

மற்றவா்கள் பற்றிய கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி, அவரது அனுமதி பெற்ற விடுதலை செய்யப்படுவாா்கள்.

குண்டு வெடிப்பு வழக்கு போன்றவற்றில் தொடா்பு இல்லாத ஆயுள் தண்டனை கைதிகள், நீதியரசா் ஆதிநாதன் குழுவிடம் முறையீடுகளைத் தெரிவித்தால், பரிசீலனைக்குப் பின்னா் தகுதியானவா்களுக்குத் தீா்வு கிடைக்கும் என்றாா் அமைச்சா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT