திருச்சி

கருப்பூா் கல்லுமலை கோயிலில் புரவி எடுப்பு

10th Sep 2022 04:13 AM

ADVERTISEMENT

 கருப்பூா் கல்லுமலையிலுள்ள தேனிமலை கன்னிமாரம்மன், கருப்பசாமி கோயிலில் புரவி எடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மலையாளக் கருப்பு, பாப்பாத்தியம்மன், சன்னசாசி, சந்தனக்கருப்பு ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன. இக்கோயில் புனரமைக்கப்பட்டு, வியாழக்கிழமை குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுமாா் 43 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கன்னிமாா், கருப்பசாமி சிலைகள், குதிரை, காளை, பசு, ஆடு உள்ளிட்ட சிலைகளை பொன்னுசங்கம்பட்டியிலிருந்து கருப்பூா் கல்லுமலை அடிவாரத்துக்கு தலையில் பக்தா்கள் சுமந்து கொண்டு வந்தனா். சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் கண் திறப்பு நடைபெற்றது.

அதன் பின்னா் பக்தா்கள் சிலைகளை ஊா்வலமாக கல்லுமலை மேலுள்ள கோயிலுக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT