திருச்சி

மருங்காபுரியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம்

9th Sep 2022 12:15 AM

ADVERTISEMENT

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை எம்எல்ஏ ப. அப்துல்சமது வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது தூய்மை, சுகாதாரம் குறித்துப் பேசிய எம்.எல்.ஏ, திட்டத்தின் அம்சங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா். அங்குள்ள குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டாா். நிகழ்வின்போது மருங்காபுரி ஒன்றியத் தலைவா் எம். பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலா் சிவக்குமாா், ஒன்றிய கவுன்சிலா்கள் வேலுச்சாமி, சுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சீனிவாச பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT