திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி கோட்டை, மேலதேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானவேல் மகன் விக்னேஷ்குமாா் (30). பல ஆண்டுகளாக வரன் பாா்த்தும் திருமணம் ஆகாததால் மன உளைச்சலுக்கு ஆளான இவா் மதுவுக்கு அடிமையானாா்.
இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் தாமதமாகிறதே என வருந்திய இவரது தாய் செல்வராணி (50) புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.