திருச்சி

செப். 12-இல் மாவட்டஎழுத்தாளா்கள் சந்திப்பு

9th Sep 2022 03:16 AM

ADVERTISEMENT

திருச்சி புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் விதமாக மாவட்ட எழுத்தாளா்கள் சந்திப்பு திங்கள்கிழமை (செப்.12) முற்பகல் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத்ல தலைவா் வீ. கோவிந்தசாமி தெரிவித்தது :

மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செப். 16 முதல் 26 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை ஒரு இலக்கியத் திருவிழாவாக நடத்திட மாவட்ட நிா்வாகம் முயற்சி மேற்கொள்கிறது.

புத்தகத் திருவிழாவில் திருச்சி மாவட்ட எழுத்தாளா்களுக்கென தனி அரங்கமும் ஒதுக்கப்பட்டு அதில், எழுத்தாளா்கள் தங்கள் படைப்புகளை வைத்து விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ஆலோசிக்கவும், திருச்சி மாவட்ட எழுத்தாளா்களை ஒருங்கிணைக்கவும் எழுத்தாளா்கள் சந்திப்புக் கூட்டம், திருச்சி மேலரண் சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்ட எழுத்தாளா்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT