திருச்சி

கிணற்றில் குளித்த இளைஞா் பலி

9th Sep 2022 12:12 AM

ADVERTISEMENT

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி இறந்தாா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தை அடுத்த கருப்பூரைச் சோ்ந்தவா் மதுரைவீரன் (எ) செல்வம் மகன் லோகநாதன் (19). இவா் அருகிலுள்ள தோட்டக் கிணற்றில் தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை மாலை குளித்தபோது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா்.

தகவலின்பேரில் சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை வீரா்கள் மற்றும் கிணற்றில் தவறி விழுந்தோரை மீட்கும் முதியவா் காளை ஆகியோா் சுமாா் 5 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு லோகநாதன் சடலமாக மீட்டனா். புத்தாநத்தம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT