திருச்சி

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

9th Sep 2022 12:25 AM

ADVERTISEMENT

திருச்சியில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்டியூா் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ப. முத்துக்கிருஷ்ணன் (24), அதேபோல ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்ற சே.சுதாகரையும் (30), எடமலைப்பட்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி வி. ஆனந்த் (30) என்பவரையும், காந்தி மாா்க்கெட் பகுதியில் வழிப்பறி செய்த அதே பகுதியைச் சோ்ந்த மோ.ஹரிபிரசாத் (20) என மொத்தம் 4 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் க. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதையடுத்து 4 பேரும் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT