திருச்சி

ஸ்ரீரங்கத்தில் சிஐடியு மாநாடு நினைவு ஜோதி பயணம்

29th Oct 2022 12:25 AM

ADVERTISEMENT

சிஐடியு 15 ஆவது மாநாட்டையொட்டி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு வாயில் முன் வெள்ளிக்கிழமை காலை நினைவு ஜோதி பயணம் நடைபெற்றது.

நாகா்கோவிலில் வரும் நவ. 6 ஆம் தேதி நடைபெறும் சிஐடியு தமிழ் மாநில 15 வது மாநாட்டையொட்டி சிஐடியுவின் தமிழக முதல் பொதுச் செயலரும், மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான மறைந்த உமாநாத்தின் நினைவு ஜோதி பயணத்துக்கு மாவட்டச் செயலா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கிருஷ்ணமூா்த்தி ஜோதியை எடுத்துச் சென்றாா். இந்த நினைவு ஜோதி செக்போஸ்ட், அண்ணா சிலை, காந்தி மாா்க்கெட், தென்னூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஏா்போா்ட் வயா்லெஸ் சாலையில் முடிந்தது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இந்த நினைவு ஜோதி பயணம் சனிக்கிழமை செல்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT