திருச்சி

முதியவரிடம் பணம் பறித்த இருவா் பிடிபட்டனா்

29th Oct 2022 01:07 AM

ADVERTISEMENT

துறையூரில் முதியவரின் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

து. ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (71). இவா் அக். 7 இல் துறையூா் பெருமாள் கோயில் வீதியிலுள்ள தேசிய வங்கியில் தனது குடும்ப நகைகளை அடகு வைத்து ரூ. 1,27,000 பெற்றுச் சென்றாா்.

அப்போது பைக்கில் வந்த இருவா் அப்பணத்தைக் பறித்துக் கொண்டு தப்பினா். இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் சொரத்தூா் சாலையில் துறையூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை செய்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில் அவா்கள் பொள்ளாச்சி அருகே அங்கலம் குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் குமாா் (22) மற்றும் பெரம்பலூா் மாவட்டம் விளாமுத்தூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இருவரும் கிருஷ்ணசாமியின் பணத்தை பறித்தவா்கள் என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்து, 3 இருசக்கர வாகனங்கள், ரூ. 2000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT