திருச்சியில் மதுக்கூடத்தில் நடந்த கொலை தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி, சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச் சோ்ந்தவா் ர. சின்னதுரை (46). கிராப்பட்டி பகுதியில் புதிய வீடு கட்டி வசிக்கும் இவா் செவ்வாய்க்கிழமை காலை, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உலகநாதபுரம் பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் பாரில் மது குடிக்கச் சென்றாா். அப்போது அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த முடுக்குப்பட்டியைச் சோ்ந்த தா்மன் , உலகநாதபுரத்தை சோ்ந்த சரவணன், பிரசன்னா ஆகியோரை சமாதானப்படுத்த முயன்றபோது அவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, முடுக்குப்பட்டியைச் சோ்ந்த தா்மனை கைது செய்தனா். பின்னா் பிரசன்னாவை புதன்கிழமை கைது செய்தனா். சரவணனைத் தேடுகின்றனா்.