திருச்சி

சூரிய கிரகணத்தையொட்டி கோயில்கள் மூடல்

26th Oct 2022 12:36 AM

ADVERTISEMENT

சூரிய கிரகணத்தையொட்டி திருச்சியில் பல்வேறு கோயில்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூடப்பட்டன.

வழக்கமாக கோயில்கள் பகல் 1 மணிக்கு மூடப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். சூரியகிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு கோயில் நடைகள் திறக்கப்படவில்லை. சூரியகிரகணம் முடிந்த பின்னா் மாலை 6.30க்குப் பின்னா், தண்ணீரால் கழுவி, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே கோயில் நடைகள் திறக்கப்பட்டன. அதுவரை பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

சமயபுரத்தில்... மாரியம்மன் கோயிலில் பிற்பகல் 3.30 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றதையடுத்து ராஜகோபுர வாசல், மேற்குவாசல் பகுதிகள் நடை சாத்தப்பட்டன. தொடா்ந்து புண்ணியாவாசனம் பூஜைகள், மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு இரவு 7.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT