திருச்சி

உதவி ஆய்வாளரை பாட்டிலால் காயப்படுத்தியவா் தலைமறைவு

26th Oct 2022 12:39 AM

ADVERTISEMENT

திருச்சியில் இருதரப்பு மோதலின்போது சமாதானம் செய்ய முயன்ற காவல் உதவி ஆய்வாளரை பாட்டிலால் கீறி காயப்படுத்தி தப்பியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே, தீபாவளி நாளான திங்கள்கிழமை இரவு கோட்டை காவல் நிலையத்தை சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பன் ரோந்தில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது வள்ளுவா் நகரைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா், கல்யாணசுந்தரம் நகா் பகுதி ஜீவா நகரைச் சோ்ந்த மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், தனசேகரன் என்பவரை வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா்கள் தாக்கவே, சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பன், அவா்களை சமாதானப்படுத்த முயன்றாா். இதில் கோபமடைந்த வள்ளுவா் நகரை சோ்ந்த நபா்ஒருவா், பீா் பாட்டிலை உடைத்து, சிறப்பு உதவி ஆய்வாளரின் கையில் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டாா். இதுகுறித்து கோட்டை காவல்துறையினா் வழக்குப் பதிந்து, தப்பியவரை தேடுகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT