திருச்சி

மணப்பாறையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

19th Oct 2022 01:07 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பயணியா் மாளிகை முன் கட்சியின் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பாா்வையாளா் லோகிதாசன், மாவட்டப் பொதுச்செயலா் பொன்னுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் வீரப்பூா் படுகளம் மலைப்பகுதியில் மண் எடுப்பதையும், ஆற்றுப்படுகையில் முறைகேடாக மணல் எடுப்பதையும் திமுக அரசு ஆதரிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா். இந்தப் பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க அவா்கள் வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள், கிளைத் தலைவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT