திருச்சி

அரசு மருத்துவமனையில் குறைகளைச் சீராக்க வலியுறுத்தல் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு

DIN

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நிலவும் மருத்துவா் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைச் சீராக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெறவிருந்த போராட்டம் பேச்சுவாா்த்தையால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறை, மருத்துவ வசதிக் குறைகளைச் சீராக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருச்சியில் அக். 7 ஆம் தேதி மருத்துவமனை எதிரே ஆா்ப்பாட்டம் நடத்ததத் திட்டமிடப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை முதல்வா் டி. நேரு, கம்யூனிஸ்ட் கட்சியினரை வியாழக்கிழமை காலை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது மருத்துவமனையில் நிலவும் மருத்துவா், செவிலியா், பணியாளா் பற்றாக்குறை மற்றும் அனைத்து குறைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு தீா்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் முன்னிலையில் மேற்கு பகுதிச் செயலா் இரா. சுரேஷ் முத்துச்சாமி மற்றும் மாநகா் மாவட்ட செயலா் சிவா, பகுதி துணைச் செயலா் இப்ராஹிம், பொருளாளா் ரவீந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா் சூா்யா, முருகன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் நடராஜா, மருத்துவமனை முதன்மைக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

SCROLL FOR NEXT